கரூர் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு
ADDED :3228 days ago
கரூர்: கரூர் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. கரூர், வாசவி மகாலில் கேதாரகவுரி நோன்பு விழாக்குழு, மாமன்னர் திருமலைநாயக்கர் பேரவை இணைந்து நடத்திய, தெலுங்குவருட பிறப்பு விழா நடந்தது. ஓய்வுபெற்ற ஆசிரியர் ராஜையா, டாக்டர் லோகநாதன், முருகானந்தம், சசிகலா, ஜெயபிரகாஷ், சீனிவாசன், குமரேசன், சுரேஷ் ஆகியோர் பேசினர். சந்திரன் நன்றி கூறினார். காலை முதல், வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்த பின், பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு இரவு வரை அம்மன் அருள்பாலித்தார்.