உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழமையான முதுமக்கள் தாழி: தரங்கம்பாடியில் கண்டெடுப்பு

பழமையான முதுமக்கள் தாழி: தரங்கம்பாடியில் கண்டெடுப்பு

மயிலாடுதுறை: நாகை மாவட்டம், தரங்கம்பாடி அருகே நடந்த தொல்லியல் ஆய்வில், 2000 ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழி, உறைகிணறு, கத்தி உள்ளிட்ட பொருட்கள் கண்டெடுக்கப் பட்டன. நாகை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா தில்லையாடி பகுதியில், தியாகி வள்ளியம்மை நினைவு மணி மண்டபத்தின் பின்புறமுள்ள தனியார் இடத்தில்,  பொறையார், டி.பி.எம்.எல்., கல்லுாரி மற்றும், திருச்சி ஈ.வெ.ரா. அரசு கலைக் கல்லுாரிகளின் வரலாற்றுத் துறை மாணவர்கள் இணைந்து, தொல்லியல் கள ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது, அப்பகுதியில் புதைந்திருந்த, 7 அடி உயரம் கொண்ட உறை கிணறு, பழமையான கத்தி, உடைந்த நிலையில் முதுமக்கள் தாழி, கின்னம் உள்ளிட்ட பொருட்கள் கண்டெடுக்கப் பட்டன. அவற்றை ஆய்வு செய்த பேராசிரியர்கள் கூறுகையில், இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ள பொருட்கள், 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டவை.  முதுமக்கள் தாழி ஓடுகளில், வலைப் பின்னல் போன்ற கலை நுணுக்க அச்சுகள் உள்ளன.  அக் காலத்திலேயே தமிழர்கள் பொருட்களை கலை நுணுக்கத்துடன் வடிவமைத்து பயன்படுத்தியதற்கான சான்றாக இவை உள்ளன’ என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !