உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தீர்த்தகிரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா

தீர்த்தகிரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா

தர்மபுரி: வத்தல்மலை பெரியூர் தீர்த்தகிரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா, நேற்று நடந்தது. வத்தல்மலை பெரியூரில் உள்ள தீர்த்தகிரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, கடந்த, 29 காலை, 6:00 மணிக்கு, கணபதி பூஜை, லஷ்மி பூஜை, கோ பூஜை, சுமங்கலி பூஜை செய்து, கொடியேற்றம் நடந்தது. நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு, இரண்டாம் கால யாக பூஜையும் நடந்தது. காலை, 9:00 மணிக்கு, கிருபாகரன் குருக்கள், தீர்த்தகிரீஸ்வரர் கோவில் கோபுர கலசத்துக்கு, புனிதநீர் ஊற்றி, கும்பாபிஷேகம் செய்து வைத்தார். கும்பாபி?ஷகத்தை முன்னிட்டு, நேற்று இரவு, 9:00 மணிக்கு தெருகூத்து நாடகம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !