திருவிழாவுக்காக தயாராகும் எட்டடுக்கு கொண்ட தேர்
ADDED :3116 days ago
உடுமலை: பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் திருவிழாவுக்காக, எட்டு அடுக்குகள் கொண்ட தேர் தயார்படுத்தப்பட்டு வருகிறது. உடுமலை மாரியம்மன் கோவிலில், ஆண்டுதோறும், தேர்த்திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு திருவிழாவுக்கு, நோன்பு சாட்டப்பட்டு, வரும் 4ம் தேதி கம்பம் நடுதல் நிகழ்ச்சி நடக்கிறது. வரும் 13ம் தேதி திருத்தேரோட்டம் நடக்கிறது. கோவிலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தேரில், துாய்மை பணிகள் நேற்று துவக்கப்பட்டன. எட்டு அடுக்குகளும், அலங்காரங்கள் இல்லாத நிலையில், 18 அடி உயரமும் கொண்ட தேரின் சக்கரங்கள் உட்பட பகுதிகள், சில நாட்களில் முழுமையாக துாய்மைப்படுத்தப்படும். பின்னர், மேற்பகுதியில், அலங்கார பொருட்கள் அடங்கிய கலசம் பொருத்தும் பணிகள் துவங்கும். இப்பணிகள் இந்து அறநிலையத்துறையினர் கண்காணிப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.