காரைக்கால் கைலாசநாதர் கோவில் பிரம்மோற்சவ விழா
ADDED :3125 days ago
காரைக்கால்: காரைக்கால் கைலாசநாதர் கோவில் பங்குனி உத்திர பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. பஞ்சமூர்த்திகளுக்கு அபிஷேக தீபாராதனை முடிந்து, ரிஷபகொடி ஏற்றப்பட்டது. பின்னர் விநாயகர், சுப்ரமணியர், கயிலாசநாதர், சுந்தராம்பாள், சண்டிகேஸ்வரர் புறப்பாடு நடந்தது. நவசந்தி யாக பூஜை தீபாராதனை நடந்தது. வரும் 2ம் தேதி மாலை பஞ்சமூர்த்திகள் அபிஷேகம் முடிந்து விநாயகர் மூஷிக வாகனத்திலும், சுப்ரமணியர் மயில் வாகனத்திலும், கயிலாசநாதர் சூரிய பிரபை,சுந்தராம்பாள் காமதேனு வாகனத்திலும், சண்டிகேஸ்வர் ரிஷப வாகனத்திலம் வீதி உலா நடக்கிறது.