உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் பங்குனித்திருவிழா துவக்கம்

திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் பங்குனித்திருவிழா துவக்கம்

கீழக்கரை: திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோயில் பங்குனி திருவிழா கொடியேற்றுடன் துவங்கியது. முன்னதாக கொடிபட்டம் ரத வீதிகளில் வலம் வந்தது. உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண ஜெகநாதப்பெருமாளுக்கு விஷேச திருமஞ்சனம் செய்யப்பட்டு, தீபாராதனை நடந்தது. விழாவை முன்னிட்டு, சீதா, லட்மணருடன் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோயில் பட்டாச்சாரியார்கள் நாலாயிர திவ்ய பிரபந்தப்பாடல்கள் பாடினர். அன்னதானம் நடந்தது. தொடர்ந்து மண்டகப்படி பூஜை முறைகள் நடக்கிறது. ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தானம், தேவஸ்தான நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !