கிழக்கு பாலப்பட்டி விநாயகர், மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :3140 days ago
சேந்தமங்கலம்: செல்லப்பம்பட்டி அடுத்த, கிழக்கு பாலப்பட்டியில் விநாயகர், பட்டாளம்மன், மாரியம்மன், நவக்கிரகம் ஆகிய தெய்வங்களுக்கு, கும்பாபிஷேக விழா நேற்று கோலாகலமாக நடந்தது. நேற்று முன்தினம் விக்னேஸ்வர பூஜை, கங்கணம் கட்டுதல், யாகசாலை பிரவேசம் நடந்தது. நேற்று, அதிகாலை, 5:00 மணிக்கு, புண்யாக வாசனம், பஞ்சகவ்யம், நாடி சந்தானம், கலசங்கம் புறப்பாடு நடந்தது. இதையடுத்து, காலை, 7:00 மணிக்கு, விநாயகர், மாரியம்மன், பட்டாளம்மன் ஆகிய கோவில்களில், கும்பாபிஷேகம் நடந்தது. சுவாமி தரிசனம், சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.