உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்!

பழநி பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்!

பழநி: பழநி பங்குனி உத்திரத்திருவிழாவை முன்னிட்டு பழநி திருஆவினன்குடி கோயிலில் கொடியேற்றம் நடந்தது.

பழநியில் பங்குனி உத்திர திருவிழா, கொடியேற்றத்துடன் துவங்கியது. இவ்விழாவை முன்னிட்டு, பெரியநாயகியம்மன் கோயிலிலிருந்து, திருஆவினன்குடி கோயிலுக்கு முத்துக் குமார சுவாமி, வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளினார். வேல், மயில், சேவல் வரையப்பட்ட கொடிப்படம், திருஆவினன்குடி கோயில் வெளிப் பிரகாரம் சுற்றி வந்து, பாத விநாயகர் கோயில் வரை சென்று வந்தது. கலசங்கள் வைத்து, கொடிமர பூஜையுடன் கொடியேற்றப்பட்டது. ‘வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா என பக்தர்கள் சரண கோஷம் எழுப்பினர். பெரியநாயகியம்மன் கோயிலிலும், மலை கோயிலிலும் காப்புக்கட்டுதல் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !