வெள்ளி அதிகார நந்தியில் ஏகாம்பரநாதர் வீதி உலா
ADDED :3146 days ago
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர திருவிழாவில், நேற்று, ஏகாம்பரநாதர், வெள்ளி அதிகார நந்தி வாகனத்தில் வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காஞ்சிபுரத்தில் சிறப்பு பெற்று விளங்கும் ஏகாம்பரநாதர் கோவிலில், பங்குனி உத்திர திருவிழா சிறப்பாக நடந்து வருகிறது. நேற்று காலை, ஏகாம்பரநாதர் அதிகார நந்தி வாகனத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தினமும் காலை, 10:00 மணிக்கு மேல் சுவாமி புறப்படுவதால், திரும்பி செல்லும் போது, உச்சி வெயிலில் வாகனத்தை இழுத்து செல்வோரும், பக்தர்களும் அவதிப்படுகின்றனர். நேற்று இரவு, சுவாமி கைலாச பீட ராவண வாகனத்தில் எழுந்தருளினார். இன்று காலை, பிரபல உற்சவமான அறுபத்து மூவர் வீதிவுலா நடை பெறுகிறது. இரவு வெள்ளித்தேரில் ஏகாம்பரநாதர் ஏலவார் குழலி ராஜ வீதிகளில் பவனி வருவர்.