கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் கோயில் கொடியேற்றம்
காளையார்கோவில்; கொல்லங்குடி அரியாகுறிச்சி வெட்டுடையார் காளியம்மன் கோவில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு விக்னேஸ்வரர் பூஜையுடன் துவங்கியது, நேற்று காலை 8 :00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது. 9:50 மணிக்கு தங்க கொடிமரத்தில் கொடியேற்றம் நடந்தது. கொடிமரத்திற்கு புனித நீர் ஊற்றி சிறப்பு அபி ேஷகம்,தீபாராத னை நடைபெற்றது. வீரமணி சாஸ்திரி வேதமந்திரங்கள் முழங்க கொடியேற்ற வைபவம் நடந்தது. தொடர்ந்து, ஏப் 4 ம்தேதி காலை 10:00 மணிக்கு 108 சங்காபிேஷகமும்,ஏப் 7 ம் தேதி 10:00 மணிக்கு தேருக்கு முகூர்த்தக்கால் நடுதல்,10ம் தேதி இரவு 7:00 மணிக்கு அம்மன் தங்ககுதிரை வாகனத்தில் வீதி உலா,11ம் தேதி காலை 8:00 மணிக்கு தேரோட்டமும், 12ம் தேதி காலை 9:00மணிக்கு தீர்த்தவாரி,மலர் பல்லக்கில் வீதி உலா, சந்தனக்குடம், பால்குடம் விழா நடக்கிறது.