மயிலம் கோவிலில் திருவள்ளுவர் விழா
ADDED :3148 days ago
மயிலம: மயிலத்தில் சித்தர் சிவஞானி கல்லுாரி மாணவர்கள் சார்பில், திருவள்ளுவர் விழா நடந்தது. பொம்மையார் பாளையம் சித்தர் சிவஞானி கலை, கலை, அறிவியல் கல்லுாரி மாணவர்கள் சார்பில், மயிலம் முருகர் கோவில் வளாகத்தில், திருவள்ளுவர் விழா நடந்தது. மயிலம் ஆதினம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமி தலைமை தாங்கி, விழாவை துவக்கி வைத்தார். தமிழ் துறை தலைவர் கோதை முன்னிலை வகித்தார். தமிழ் துறை பேராசிரியர் அருணன் வரவேற்றார். மயிலம் சிவபிரகாசர் மேல்நிலைப் பள்ளி செயலர் விஸ்வநாதன் சிறப்புரையாற்றினார். கல்லுாரி மாணவ, மாணவிகள் சார்பில் திருக்குறள் சமூக விழிப்புணர்வு நாடகம், கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்துக் கொண்டனர்.