நிலக்கோட்டை மாரியம்மன் கோயில் கொடியேற்றத்துடன் துவக்கம்
ADDED :3149 days ago
நிலக்கோட்டை: நிலக்கோட்டை மாரியம்மன் கோயில் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இந்து நாடார் உறவின் முறை நற்பணி மன்றம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அம்மனுக்கு பூச்சொரிதல் விழா நடந்தது. நிலக்கோட்டை சுற்று வட்டார கிராமத்தினர் இதில் பங்கேற்றனர். இவ்விழாவையொட்டி கொண்டு வரப்பட்ட பூக்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. அம்மன், ராஜேஸ்வரி, பத்ரகாளி, சரஸ்வதி, மகாலட்சுமி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். 13ம் தேதி அம்மன் பூஞ்சோலை சென்றடைகிறார். ஏற்பாடுகளை இந்து நாடார் உறவின்முறை நிர்வாகிகள் சுசீந்திரன், பாண்டியராஜன், ஜெயபாண்டியன், சுரேஷ்பாபு, கருமலைப்பாண்டியன் செய்திருந்தனர்.