உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தே.கோட்டை பேட்டராய சுவாமி கோவிலில் கொடியேற்று விழா

தே.கோட்டை பேட்டராய சுவாமி கோவிலில் கொடியேற்று விழா

ஓசூர்: தேன்கனிக்கோட்டையில், பழமையான பேட்டராய சுவாமி கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில், வரும், 7 முதல், 9 வரை தேர்த்திருவிழா நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, வரும், 8ல் தேரோட்டம் நடக்கிறது. இதை முன்னிட்டு, கடந்த மாதம், 22ல் பால்கம்பம் நடும் நிழ்ச்சி நடந்தது. இந்நிலையில், தேர்த்திருவிழாவை முன்னிட்டு, கோவில் தலைமை அர்ச்சகர் கண்ணன் தலைமையில், ஆகம விதிப்படி, அர்ச்சகர்கள் வேதமந்திரங்கள் ஓத, கோவில் கொடி மரத்தில் நேற்று காலை கொடியேற்று விழா நடந்தது. இதில் சுற்றுப்பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !