கணேசபுரம் மாரியம்மன் கோயில் விழா
ADDED :3149 days ago
காரைக்குடி:காரைக்குடி கணேசபுரம் மாரியம்மன் கோயில் பங்குனி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று மாலை அம்பாள் சந்தனகாப்பு நிகழ்ச்சியும், முன்னதாக கடந்த 31-ம் தேதி பூச்சொரிதல் விழாவும் நடந்தது.விழா நாட்களில் மாலை 6:00 மணிக்கு அம்பாளுக்கு சிறப்பு அபிேஷக, ஆராதனை நடக்கிறது. வருகிற 9-ம் தேதி கீழ ஊரணி விநாயகர் கோயிலிலிருந்து பால்குடம், மற்றும் வேல்காவடி எடுத்து வந்து பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. மாலை கரகம், மற்றும் மது, முளைப்பாரி ஊர்வலமும், இரவு அம்மன் திருவீதி உலாவும் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.