உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / லட்சுமி வெங்கடரமண சுவாமி கோவில் தேரோட்டம்

லட்சுமி வெங்கடரமண சுவாமி கோவில் தேரோட்டம்

ஓசூர்: பேரிகை அருகே நடந்த லட்சுமி வெங்கடரமண சுவாமி கோவில் தேரோட்டத்தில், திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். ஓசூர் அடுத்த பேரிகை அருகே உள்ள தாசனபுரத்தில், பழமையான லட்சுமி வெங்கடரமண சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் தேர்த்திருவிழா, கடந்த, 1ல் துவங்கியது. விழாவையொட்டி தினமும் சுவாமிக்கு சிறப்பு அபி?ஷகம், ஆராதனை மற்றும் ஹோமங்கள் நடந்தன. நேற்று முன்தினம் காலை, 10:00 மணிக்கு, பக்தர்கள் வடம் பிடிக்க தேரோட்டம் நடந்தது. இதில் தாசனபுரம், புக்கசாகரம், பேரிகை, அத்திமுகம், ஏ.செட்டிபள்ளி, தோரிப்பள்ளி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று, கோவிந்தா, கோவிந்தா என்ற பக்தி கோஷத்துடன் தேரை இழுத்தனர். அதேபோல் நேற்று மதியம், 12:30 மணிக்கு, பேரிகை வெங்கடரமண சுவாமி கோவில் தேரோட்டம் நடந்தது. பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்க, முக்கிய வீதிகள் வழியாக சென்ற தேர், மாலையில் நிலையை அடைந்தது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !