உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தர்மபுரி கோவிலில் பங்குனி தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

தர்மபுரி கோவிலில் பங்குனி தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

தர்மபுரி: தர்மபுரி அன்னசாகரம் விநாயகர், சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில், பங்குனி உத்திரம் தேர்த்திருவிழாவை முன்னிட்டு, நேற்று கொடியேற்றம் நடந்தது. தர்மபுரி அடுத்த அன்னசாகரம் விநாயகர், சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில், பங்குனி உத்திர தேர்த்திருவிழாவை முன்னிட்டு, நேற்று காலை, 10:00 மணிக்கு, கோவில் வளாகத்தில் உள்ள கொடிமரத்தில், கொடியேற்றம் நடந்தது. முன்னதாக, நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு, புற்றுமண் எடுத்தல், வாஸ்து சாந்தி நடந்தது. வரும், 7 இரவு, 9:00 மணிக்கு, வள்ளி, தெய்வானை சமேத சிவசுப்பிரமணியருக்கு, திருக்கல்யாணம் நடக்கிறது. பின், மயில் வாகனத்தில், சுவாமி ஊர்வலம் நடக்கிறது. வரும், 9 காலை, 8:30 மணிக்கு, மூலவருக்கு அபிஷேகம், அலங்காரம் நடக்கிறது. அன்று காலை 9:30 மணிக்கு, பெண்கள் மட்டுமே வடம் பிடித்து, தேர் இழுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. வரும், 11 மாலை, 4:00 மணிக்கு மஞ்சள் நீராட்டு நடக்கிறது. அன்று மாலை, 5:00 மணிக்கு கொடி இறக்கம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !