உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விஸ்வேஸ்வரசுவாமி கோவில் கும்பாபிஷேக முதலாம் ஆண்டு விழா

விஸ்வேஸ்வரசுவாமி கோவில் கும்பாபிஷேக முதலாம் ஆண்டு விழா

திருப்பூர் : திருப்பூர் ஸ்ரீ விஸ்வேஸ்வரசுவாமி கோவில் கும்பாபிஷேக முதலாம் ஆண்டு விழா, இன்று நடைபெறவுள்ளது. இதையொட்டி, நேற்று மாலை, 5:30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, நவ கலச பூஜை, முதல் கால யாக பூஜை நடந்தது. இன்று காலை, 8:30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, இரண்டாம் கால யாக பூஜை நடக்கிறது. காலை, 10:30 மணிக்கு ஸ்ரீ விஸ்வேஸ்வர சுவாமிக்கு 108 சங்காபிஷேகம், சுப்ரமணியருக்கு நவ கலச அபிஷேகம், விசாலாட்சியம்மனுக்கு நவ கலச அபிஷேகம் நடக்கிறது. பகல், 12:00 மணிக்கு மகா தீபாராதனை, பிரசாதம், அன்னதானம் நடக்கிறது. மாலை, 6:00 மணிக்கு, "மூவர் தேவாரம் என்ற தலைப்பில், ஆன்மீக சொற்பொழிவு நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !