உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சேலத்தில் ஷீரடி சாய்பாபா பிறந்தநாள், ராமநவமி உற்சவம்

சேலத்தில் ஷீரடி சாய்பாபா பிறந்தநாள், ராமநவமி உற்சவம்

சேலம்: சேலத்தில், ஷீரடி சாய்பாபா கோவிலில், ராமநவமி உற்சவம் கொண்டாடப்பட்டது. ஷீரடி சாய்பாபா பிறந்தநாள் விழா, நாடு முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. சேலம், ஏற்காடு பிரதான சாலையில் உள்ள, ஷீரடி சாய்பாபா கோவிலில், ராமநவமி உற்சவம் கொண்டாடப்பட்டது. அதிகாலை முதல், பாபாவிற்கு பல்வேறு வித திரவியங்களால், சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. காலை, காக்கட் எனும் ஆரத்திக்கு பின், பல்வேறு மாநிலங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட வண்ண மலர்களால், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து, சாய் பஜன் குழுவினரால், பக்தி பஜனை நடந்தது. மதியம், 12:00 மணியளவில், மதியான் ஆரத்தி பாடப்பட்டது. பின், பாபாவிற்கு மஹா தீபாராதனை காட்டப்பட்டது. அந்த உற்சவத்தை, ஆயிரக்கணக்கான பக்தர்கள், தரிசனம் செய்து வழிபட்டனர். மாலை, முகமதியரின் சந்தன காப்பு நடந்தது. தொடர்ந்து, பல்லக்கு எனும் சாவடி, இரவு ஆரத்தி ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !