சாரதாம்பாள் கோயிலில் ஏப். 9ல் கும்பாபிபேஷகம்
ராஜபாளையம்: ராஜபாளையம் அருகில் உள்ள தெற்கு வெங்காநல்லுார் செல்லும் சாலையில் அபிநவவித்யாதீர்த்த பாரதீ வேதபாடசாலை வளாகத்தில் ஸ்ரீ சாரதாம்பாள் கோயில் உள்ளது. இங்கு ஏப்.9ல் கும்பாபிேஷகம் நடக்கிறது. இதை நடத்தி வைப்பதற்காக சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடாதிபதிகள் ஸ்ரீஸ்ரீ பாரதீதீர்த்த மஹாஸன்னிதானம் மற்றும் ஸ்ரீஸ்ரீ விதுசேகர பாரதீ ஸன்னிதானம் இருவரும் ராஜபாளையத்திற்கு நேற்று மாலை 6:00 மணிக்கு வந்தனர். ராம்கோ நிறுவனம் சார்பில் பூர்ண கும்ப மரியாதையுடன் மேள தாளங்கள் சூழ வரவேற்பு ஊர்வலம், ராமமந்திரம் வரை நடைபெற்றது. அத்துடன் ஸ்ரீ சாரதா சந்திர மவுலீஸ்வரர் பூஜை நடைபெற்றது. ஏப். 14 வரை ராஜபாளையத்தில் உள்ள அபிநவவித்யாதீர்த்த பாரதீ வேதபாடசாலை வளாகத்தில் சுவாமிகள் பக்தர்களுக்கு அருளாசி வழங்க உள்ளனர். இதை தொடர்ந்து தினமும் மாலை கர்நாடக இசை, பஜனை மற்றம் உபன்யாசம் நடைபெற உள்ளது. ஏற்பாடுகளை ராம்கோ குரூப் சேர்மன் பி.ஆர்.ராமசுப்பிரமணியராஜா மற்றும் குடும்பத்தினர் செய்துள்ளார்.