உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆயிரங்கண் மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா துவக்கம்

ஆயிரங்கண் மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா துவக்கம்

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் ஆயிரங்கண் மாரியம்மன் கோயில்பங்குனி பொங்கல் விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.அருப்புக்கோட்டை, புளியம்பட்டி-திருநகரம் சாலியர் மகாசன பரிபாலன சபைக்கு பாத்தியப்பட்ட இக் கோயில் பங்குனி பொங்கல் விழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் துவங்கியது. உறவின் முறை அலுவலகத்திலிருந்து கொடி சீலை ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கோயிலை அடைய, அங்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு கொடியேற்றம் நடந்தது. 12 நாட்கள் நடக்கும் விழாவில் அம்மன் தினமும் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.

அக்னி சட்டி: எட்டாம் நாள் விழாவாக கோயில் முன்பு பெண்கள் விரதம் இருந்து பொங்கல் வைத்து அம்மனுக்கு படைப்பர். ஒன்பதாம் நாள் அக்னி சட்டிகள் எடுத்து நேர்த்தி கடன் செலுத்துவர். பத்தாம் நாள் விழாவில் திருத்தேர் ஊர்வலம் நடைபெறுகிறது. எற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் மற்றும் விழா குழுவினர் செய்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !