ராமபக்த ஜெயவீர ஆஞ்சநேயர் கோவிலில் ராமநவமி உற்சவம்
ADDED :3115 days ago
அவலுார்பேட்டை: அவலுார்பேட்டையில் ராமபக்த ஜெயவீர ஆஞ்சநேயர் கோவிலில் ராமநவமி உற்சவம் நடந்தது. காலையில் ஆஞ்சநேயர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. பின்னர் சந்தன காப்பு அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார். இரவு சீதா ராம சுவாமி, பட்டாபிஷேக அலங்காரத்தில் வீதிஉலா நடந்தது.