கோதண்டராம பெருமாள் கோவில் வசந்த உற்சவ தேரோட்டம்
ADDED :3446 days ago
சிதம்பரம்: சிதம்பரத்தில் கோதண்டராம பெருமாள் கோவில் வசந்த உற்சவத்தையொட்டி தேரோட்டம் நடந்தது. கடந்த 28ம் தேதி கொடியேற்றத்துடன் வசந்த உற்சவம் துவங்கியது. இதனையொட்டி ஸ்ரீதேவி பூதேவி சமேத கோதண்டராம பெருமாளுக்கு தினமும் காலை திருமஞ்சனம், திருப்பாவை சேவை சாத்துமுறை நடக்கிறது. மாலை சிறப்பு பூஜை நடைபெற்று சுவாமி புறப்பாடு நடக்கிறது. ஒன்பதாம் நாள் உற்சவமான நேற்று திருத்தேரோட்டம் காலை ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். இரவு ஸ்ரீதேவி பூதேவி சமேத கோதண்டராம பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.