உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உத்திர விழா துவக்கம்

வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உத்திர விழா துவக்கம்

வால்பாறை: வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலின், 65ம் ஆண்டு பங்குனி உத்திரத்திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. முருகன் நற்பணி மன்ற தலைவர் மதனகோபால் முன்னிலையில் காலை 10:30 மணிக்கு திருக்கொடி ஏற்றப்பட்டது.  விழாவில், நாளை (8ம் தேதி) மாலை, 6:00 மணிக்கு காமாட்சி அம்மன் கோவிலிருந்து பால்குடம் எடுத்துவந்து அபிேஷக பூஜை செய்யப்படுகிறது. விழாவில் வரும், 9ம் தேதி மாலை 3:00 மணிக்கு முருகன் வள்ளி தெய்வானைக்கு திருக்கல்யாணமும், வரும், 10ம் தேதி காலை 10:00 மணிக்கு அன்னதானம் வழங்கும் விழாவும் நடக்கிறது.  விழாவிற்கான ஏற்பாடுகளை முருகன் நற்பணி மன்ற நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !