சீரடி சாய்பாபா ஜெயந்தி விழா: விருதுநகரில் பக்தர்கள் தரிசனம்
ADDED :3144 days ago
விருதுநகர், விருதுநகர் ஸ்ரீ சீரடி சாய்பாபா கோயிலில் நடந்த ஜெயந்தி விழாவில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.விருதுநகர் சிவகாசி சாலையில் உள்ள மீசலுார் விலக்கில் ஸ்ரீ சீரடி சாய்பாபா கோயில் உள்ளது. இங்கு சாய்பாபா ஜெயந்தி விழா நேற்று நடைபெற்றது. இதை தொடர்ந்து காலை 6:00 மணி முதல் 9:00 மணி வரை ஸ்ரீ கணபதி ஹோம், ஸ்ரீ சுதர்சனம், ஸ்ரீ லெட்சுமி, ஸ்ரீ மகாவிஷ்ணு, ஸ்ரீ சீரடி சாய்பாபா ஹோமங்கள், காலை 9:30 முதல் 11:00 மணி வரை ஸ்ரீ சீரடி சாய்பாபா பாதங்களுக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது. இதன்பின் சொற்பொழிவு, மகா தீபாராதனை, அன்னதானம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.