காளத்தீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ திருக்கல்யாண உற்சவம்
ADDED :3227 days ago
புதுச்சேரி: காளத்தீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவத்தில் நேற்று திருக்கல்யாண உற்சவம் நடந்தது. புதுச்சேரி, மிஷன் வீதி காளத்தீஸ்வரர்- வரதராஜப் பெருமாள் கோவிலில் அமைந்துள்ள ஞானாம்பிகை சமேத காளதீஸ்வரருக்கு, 14ம் ஆண்டு பிரமோற்சவ விழா 1ம் தேதி துவங்கியது. அதனை தொடர்ந்து தினமும் காலை, மாலையும் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை, அபிஷேக ஆராதனை, சுவாமி வீதியுலா நடந்து வருகிறது. நேற்று, காலை 9:00 மணி முதல், 10:30 மணி வரை, திருக்கல்யாண உற்சவம் நடந்தது. ஞானாம்பிகை சமேத காளதீஸ்வரர் சுவாமிகள் அலங்கார கோலத்தில் எழுந்தருள செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.முக்கிய உற்சவமான தேரோட்டம் வரும் 10ம் தேதி நடக்கிறது. ஏற்பாடுகளை, அறங்காவல் குழு தலைவர் பாஸ்கரன் தலைமையில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.