தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவிலில் பங்குனி தேரோட்டம்
ADDED :3144 days ago
இளையான்குடி: தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவிலில் பங்குனி தேரோட்டம் நடைபெற்றது. தாயமங்கலம் முத்துமாரியம்மன் விழா மார்ச்.,28ல் கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.முக்கிய விழாவான பங்குனி தேரோட்டம் நேற்றுமுன்தினம் இரவு நடைபெற்றது. இதில் பக்தர்கள் சிலா குத்துதல் என்னும் நேர்த்தி கடனை செலுத்தினர். தொடர்ந்து இரவு 8.00 மணி அளவில் அம்மன் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு மின்னொளி பொருத்திய தேரில் வீதி உலா வந்தார். இத்தேரோட்டத்தை காண சுற்றியுள்ள கிராம மக்கள் வந்திருந்தனர்.