உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெரியாயி அம்மன் கோவிலில் வரும் 25ல் மயான கொள்ளை

பெரியாயி அம்மன் கோவிலில் வரும் 25ல் மயான கொள்ளை

ஊத்துக்கோட்டை: பெரியாயி அம்மன் கோவிலில், வரும், 25ம் தேதி, மூன்றாம் ஆண்டு மயான கொள்ளை விழா நடைபெற உள்ளது. ஊத்துக்கோட்டை - பெரியபாளையம் மாநில நெடுஞ்சாலையில், எல்லம்பேட்டை கிராமத்தில் உள்ளது அங்காள பரமேஸ்வரி அம்மன் மற்றும் பெரியாயி அம்மன் கோவில். இங்கு, அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில், விசேஷ பூஜைகள் நடைபெறும். சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து தங்கி அம்மனை வழிபடுவர். இங்கு வரும், 25ம் தேதி சித்திரை அமாவாசை, மூன்றாம் ஆண்டு, மயானக் கொள்ளை திருவிழா நடைபெற உள்ளது. ஐந்து நாட்கள் நடைபெறும் இவ்விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர்.

தேதி    கிழமை    நேரம்    நிகழ்ச்சி

ஏப்., 25    செவ்வாய்    காலை 8:00 மணி காப்பு கட்டி, கொடி ஏற்றுதல், மாலை 4:00 மணி புறக்கூடை, சக்தி கரகம், தீச்சட்டி எடுத்தல், அலகு போடுதல், அம்மன் வீதி உலா, இரவு 9:00 மணி நிசாசன்னி வதம்

ஏப்., 26    புதன் காலை 6:30 மணிஅம்மனுக்கு நலங்கு வைத்தல், சீர்வரிசை எடுத்தல், காலை 9:00 மணி மயான கொள்ளை சூறையிடுதல், வெள்ளாள கண்டி அழித்தல், மாலை 6:30 மணி, பக்தி இன்னிசை கச்சேரி இரவு 9:00 மணி அம்மன் வர்ணிப்பு, இரவு 9:30 மணி கும்ப படையல்

ஏப்., 27    வியாழன்    காலை 7:30 மணி அம்மனுக்கு அபிஷேகம், இரவு 10:00 மணி உதிரவாய் துடைத்தல்,
ஏப்., 28    வெள்ளி    காலை 8:00 மணி பால்குடம் எடுத்தல்
ஏப்., 29    சனி காலை 9:00 மணி ஊரணி பொங்கல் வைத்து படையல் போடுதல்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !