உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பல்லக்கில் பஞ்சமூர்த்திகள் பொன்னேரியில் வீதி உலா

பல்லக்கில் பஞ்சமூர்த்திகள் பொன்னேரியில் வீதி உலா

பொன்னேரி: அகத்தீஸ்வர கோவில் பிரம்மோற்சவத்தின்போது, பஞ்சமூர்த்திகள், பல்லக்கில் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பொன்னேரியில், ஆனந்தவல்லி வலம் கொண்ட அகத்தீஸ்வரர் கோவில் உள்ளது. கடந்த, 31ம் தேதி முதல், பிரம்மோற்சவ விழா இக்கோவிலில் நடைபெற்று வருகிறது. அன்ன வாகனம், சூரிய பிரபை, சிம்ம வாகனம், அதிகார நந்தி கோபுர தரிசனம் என, பல்வேறு உற்சவங்கள் நடைபெற்றன. தினமும் பஞ்ச மூர்த்திகள், வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். நேற்று, பல்லக்கு விழா, பஞ்ச மூர்த்திகள் வீதியுலா, நால்வர் புறப்பாடு ஆகியவை சிறப்பாக நடைபெற்றன. உற்சவ பெருமான் அகத்தீஸ்வரர், பஞ்ச மூர்த்திகளுடன் பல்லக்கில் மாடவீதிகள் வழியாக உலா வந்தார். பக்தர்கள் திரளாக பங்கேற்று பெருமானை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !