பத்மாவதி தாயார் கோவில் ரதத்திற்கு இரும்பு சக்கரம்!
ADDED :5193 days ago
நகரி:திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில், உற்சவ சேவைக்குப் பயன்படுத்தப்படும், மரத்தால் வடிவமைக்கப்பட்ட ரதத்தின் நான்கு சக்கரங்களும், தேய்ந்து பழுதாகி விட்டன. அவற்றுக்கு பதிலாக, இரும்புச் சக்கரம் அமைக்கும் பணியை, திருப்பதி தேவஸ்தான நிர்வாகம், பெல் நிறுவனத்திடம் ஒப்படைத்தது.இந்தப் பணிகள், நேற்று முன்தினம் முடிவடைந்தன. உற்சவ சேவைகளின் போது, ரதத்தின் வேகத்தைக் கட்டுப்படுத்த வசதியாக, "ஹைட்ராலிக் பிரேக் உடன், இரும்புச் சக்கரங்களும் அமைக்கப்பட்டன. புதிய ரதம், திருச்சானூர் மாட வீதியில், சோதனை அடிப்படையில் நேற்று வலம் வந்தது.