கோத்தகிரியில் அம்மன் அழைப்பு பக்தர்கள் பங்கேற்பு
ADDED :3098 days ago
கோத்தகிரி சக்கத்தா மாரியம்மன் திரு விழாவை ஒட்டி, அம்மனை அழைத்துவரும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.கோத்தகிரி - மேட்டுப்பாளையம் சாலையில் அமைந்துள்ள, சக்கத்தா
மாரியம்மன் திருவிழா, கடந்த, 6ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவை ஒட்டி, நேற்று முன்தினம் காலை, 7:00 மணிக்கு அபிஷேக அலங்கார சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து, இரவு, 7:00 மணிக்கு, பஜனை, ஆடல் பாடலுடன், அம்மனை அழைத்துவரும் நிகழ்ச்சி நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். நேற்று காலை, 10:30 மணிக்கு, அம்மன் ஊர்வலம் புறப்பாடு நடந்தது. இன்று (12ம் தேதி) காலை, 9:00 மணிக்கு, திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, ஊர் தலைவர் பெள்ளிராஜ், கோவில் கமிட்டியினர் மற்றும் பொதுமக்கள் செய்துள்ளனர்.