காரிமங்கலம் சீதா, ராமர் திருக்கல்யாண உற்சவம்
ADDED :3098 days ago
காரிமங்கலம் அக்ரஹாரம் ராமர் கோவிலில், வரும், 16ல் சீதா ராமர் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. காரிமங்கலம் அக்ரஹாரம் ராமர் கோவிலில், கடந்த, 50 ஆண்டுகளாக ஸ்ரீராம நவமி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. 51ம் ஆண்டு ஸ்ரீராம நவமி விழா, கடந்த, 5ல் துவங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, சீதா ராமர் திருக்கல்யாண உற்சவம், வரும், 16 இரவு, 7:00 மணிக்கு கோவில் வசந்த மண்டபத்தில் நடக்கிறது. இதையடுத்து, 18 ல் சுவாமி எழுத்தருளல்
நிகழ்ச்சியும், 21ல் சயன உற்சவமும், 22ல் அனுமந்த உற்சவம், சங்கர ஜெயந்தியும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை தூர்வாசர், உதயசங்கர், ஸ்ரீதர் மற்றும் விழாக்கமிட்டியினர் செய்து வருகின்றனர்.