உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேனி கண்ணகி கோயில் விழா ஆலோசனை கூட்டம்

தேனி கண்ணகி கோயில் விழா ஆலோசனை கூட்டம்

கண்ணகி கோயில் விழா ஆலோசனை கூட்டம் தேனி, இடுக்கி  கலெக்டர்கள் பங்கேற்புகூடலூர்  மே 10ல் நடக்க உள்ள மங்கலதேவி கண்ணகி கோயில்  சித்ராபவுர்ணமி விழா முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக்கூட்டம், நேற்று தேக்கடியில் நடந் தது.தமிழக- - - கேரள எல்லையில் வரலாற்று சிறப்பு மிக்க மங்கலதேவி  கண்ணகி கோயில் யாருக்குச் சொந்தம் என்ற பிரச்னை பல ஆண்டாக இரு மாநிலங்களுக்கு இடையே நடந்தது வருகிறது. இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்ராபவுர்ணமி தினத்தன்று விழா  கொண்டாடப்படும்.இந்தாண்டு மே 10ல் கண்ணகி கோயிலில் சித்ரா பவுர்ணமி விழா  கொண்டாடப்பட உள்ளது. இதற்கான ஆலோசனைக்கூட்டம் தேனி கலெக்டர் வெங்கடாசலம், இடுக்கி கலெக்டர் கோகுல் தலைமையில் நேற்று தேக்கடி ராஜிவ்காந்தி அறிவியல்  மையத்தில் நடந்தது. அதிகாலை 5:00 மணியில் இருந்து மாலை 5:00 மணி வரை கோயிலில் விழா கொண்டாடுவது, குமுளியில் இருந்து கோயில் வரை பக்தர்களுக்கு கேரள வனத்துறை சார்பில் குடிநீர் வசதி ஏற்படுத்தி தருவது, ஜீப் பாதை சீரமைப்பது, கோயில் வளாகத்தில் கண்ணகி அறக்கட்டளை சார்பில் அன்னதானம் வழங்குவது உள்ளிட்டவை குறித்து கூட்டத்தில் முடிவு செய்யப்பட் டது. கோயிலில் இருந்து 5 கி.மீ, தூரத்திலேயே பக்தர்கள் வரும் வாகனத்தை நிறுத்தி விட்டு நடந்து செல்ல வேண்டும் என கேரள வனத்துறையினர் தெரிவித்தனர். அதற்கு மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளை நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்ததால், பழைய முறைப்படியே கோயிலுக்கு அருகிலேயே வாகனங்களை நிறுத்தி விழா கொண்டாடுவது என முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் கண்ணகி அறக்கட்டளை தலைவர் தமிழாதன், செயலாளர் ராஜகணேசன், பொருளாளர் முருகன், நிர்வாகிகள், இருமாநில அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !