உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிருஷ்ணராயபுரம் மாரியம்மன் கோவில் பவுர்ணமி வழிபாடு

கிருஷ்ணராயபுரம் மாரியம்மன் கோவில் பவுர்ணமி வழிபாடு

கிருஷ்ணராயபுரம் சிந்தலவாடி மாரியம்மன் கோவிலில், பவுர்ணமி  பூஜையை முன்னிட்டு, சிறப்பு வழிபாடு நடந்தது. கிருஷ்ணராயபுரம்  தாலுகா, சிந்தலவாடி மாரியம்மன் கோவிலில், மாதந்தோறும் பவுர்ணமி பூஜை நடப்பது வழக்கம். இந்நிலையில், நேற்று முன்தினம் நடந்த பவுர்ணமி பூஜையில், அம்மனுக்கு பல்வேறு திரவியங்களில் அபிஷேகங்கள் நடத்தப்பட்டன. தொடர்ந்து, சிறப்பு ஆராதனை, அன்னதானம் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன. இதில், லாலாப்பேட்டை, மகிளிப்பட்டி, புணவாசிப்பட்டி சுற்றுவட்டார  பகுதியை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !