உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கரூர் பகவதி அம்மன் கோவில் விழா

கரூர் பகவதி அம்மன் கோவில் விழா

பகவதி அம்மன் கோவில் விழா: பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் கரூர் தான்தோன்றிமலை முத்துமாரியம்மன், பகவதி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, பூக்குழி இறங்கும் விழா கோலாகலமாக நடந்தது. கரூர் அடுத்த, தான்தோன்றிமலை முத்துமாரியம்மன், பகவதி அம்மன் கோவில் திருவிழா முன்னிட்டு, கடந்த, 2ல், அமராவதி ஆற்றிலிருந்து கம்பம் எடுத்து
வந்து, கோவிலில் கம்பம் நட்டு விழாவை துவக்கினர். அன்றிலிருந்து, ஏராளமான பக்தர்கள் கம்பத்திற்கு புனித நீரை ஊற்றி, சுவாமியை வழிபட்டனர். காலையில், அம்மனுக்கு சிறப்பு
அபிஷேகம் நடத்தி, நாள்தோறும் அன்ன வாகனம் உள்ளிட்ட வாகனங்களில், அம்மன் முக்கிய வீதிகள் வழியாக வீதி உலா நடந்தது. இந்நிலையில், நேற்று, அமராவதி ஆற்றிலிருந்து, 200க்கும் மேற்பட்ட பக்தர்கள், பால்குடம் எடுத்து, சுங்ககேட், தான்தோன்றிமலை வழியாக கோவிலுக்கு வந்தனர். தொடர்ந்து, 70க்கும் மேற்பட்டோர், அலகு குத்தி ஊர்வலமாக வந்து, கோவில் முன் அமைக்கப்பட்ட அக்னி குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !