கரூர் மழை பெய்ய வேண்டி சிறப்பு தொழுகை
ADDED :3096 days ago
கரூரில், மழை பெய்ய வேண்டி, மசூதியில் சிறப்பு தொழுகை நடந்தது. கரூர் - கோவை சாலையில் உள்ள ஈத்கா பள்ளி வாசலில், நேற்று, மழைக்காக தொழுகை நடந்தது. இதில், 100க்கும் மேற்பட்ட இஸ்லாமியர் பங்கேற்றனர். தொழுகைக்கு பின், பஜார் பள்ளி வாசலில், இமாம் முகம்மது அபுல் ஹசன்தாவுதி கூறியதாவது: பல ஆண்டுகளுக்கு பின், தமிழகத்தில் கடுமையான வறட்சி நிலவுகிறது. குடிநீருக்காக மக்கள் அவதிப்படுகின்றனர். கோடை மழையும் எதிர்பார்த்த அளவில் பெய்யவில்லை. விவசாய பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. கரூர் மாவட்டத்தில், எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு, வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. மழை பெய்தால் நிலைமை சற்று குறையும். தொழுகையால் மழை பெய்த வரலாறு உண்டு. மழை வரும் என்று நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.