உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொன்னேரி கரிகிருஷ்ண பெருமாள் கோவிலில் கொடியேற்றம்

பொன்னேரி கரிகிருஷ்ண பெருமாள் கோவிலில் கொடியேற்றம்

பொன்னேரி : பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு, பொன்னேரி  கரிகிருஷ்ண பெருமாள் கோவிலில், நேற்று, கொடியேற்றம் நிகழ்ச்சி நடந்தது. பொன்னேரி திருவாயற்பாடியில் உள்ள
சவுந்தர்யவல்லி தாயார் சமேத கரிகிருஷ்ண பெருமாள்  கோவிலில், பிரம்மோற்சவ விழா, நேற்று முன்தினம் மாலை,  செல்வர் திருக்கூத்துடன் துவங்கியது. தொடர்ந்து, 14 நாட்களுக்கு
என, இம்மாதம் 24ம் தேதி வரை, சந்திர பிரபை, சூரிய பிரபை,  சந்திப்பு திருவிழா, தேரோட்டம் என, உற்சவங்கள் நடைபெற  உள்ளன. இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக, நேற்று, காலை 6:15
மணிக்கு, கொடியேற்றம் நிகழ்ச்சி நடந்தது. அதை தொடர்ந்து,  காலை, 8:00 மணிக்கு, தங்கமுலாம் தொட்டியும், இரவு, 7:00  மணிக்கு சிம்ம வாகனம் நடைபெற்றன. கொடியேற்ற
நிகழ்ச்சியின்போது, நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று,  பெருமாளை வழிபட்டு சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !