உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநியில் அறிவிப்புடன் நின்ற இலவச பஞ்சாமிர்தம் திட்டம்

பழநியில் அறிவிப்புடன் நின்ற இலவச பஞ்சாமிர்தம் திட்டம்

பழநி: பழநியில் பக்தர்களுக்கு இலவச பஞ்சாமிர்தம் வழங்கும்  திட்டம் அரசின் அறிவிப்போடு கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்த  திட்டத்தை விரைந்து நிறைவேற்ற பக்தர்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர். பழநி முருகன் கோயிலின் பிரதான பிரசாதமாக பஞ்சாமிர்தம்  உள்ளது. கோயில் நிர்வாகம் சார்பில், அரை கிலோ டப்பா ரூ.35,  டின் ரூ.40, கிப்ட் பாக்ஸ் ரூ.300 என்ற விலையில், ஆண்டுக்கு ரூ.25 கோடி வரை பஞ்சாமிர்தம் விற்பனையாகிறது. 2016ம்
ஆண்டு திருப்பதியில் இலவசமாக லட்டு வழங்குவது போல, பழநி  வரும் பக்தர்களுக்கு இலவசமாக தொன்னையில் பஞ்சாமிர்தம்  வழங்கப்படும் என, தமிழக அரசு அறிவித்தது.இந்நிலையில் அதற்கான எந்தவித ஏற்பாடும் இன்றி திட்டம் கிடப்பில்
போடப்பட்டது. ஆண்டுக்கு ரூ.200 கோடி வருமானம் உள்ள பழநி  கோயில் நிர்வாகம், பக்தர்களுக்கு பஞ்சாமிர்தம் மற்றும் விபூதி  பாக்கெட்டை இலவசமாக வழங்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்திஉள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !