ராமமூர்த்தி பஜனை மடத்தில் ராமநவமி உற்சவ விழா
ADDED :3099 days ago
வத்திராயிருப்பு:வத்திராயிருப்பு நடுஅக்கிரஹாரம் ஸ்ரீராமமூர்த்தி பஜனை மடத்தில் ராமநவமி உற்சவ விழா துவங்கியது. தினமும் சுவாமிக்கு காலையில் சிறப்பு பஜனை வழிபாடுடன் பூஜைகளும், மாலையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தலைப்புகளில் ஸ்ரீமத்ராமாயண தொடர் சொற்பொழிவும் நடந்து வருகிறது. அலங்காரம் ராஜகோபால் சொற்பொழிவாற்றினார். இதனை தொடர்ந்து இன்று முக்கிய நிகழ்வான ராமர் பட்டாபிஷேகமும், சீதா கல்யாணமும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை மதுரை ஸ்ரீசக்ர ராஜராஜேஸ்வரி பீடம் சிஷ்யர்கள் செய்துள்ளனர்.