உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உடுமலை மாரியம்மன் கோவில் தேரோட்டம் கோலாகலம்

உடுமலை மாரியம்மன் கோவில் தேரோட்டம் கோலாகலம்

உடுமலை: உடுமலை மாரியம்மன் கோவிலில் தேரோட்டம்  கோலாகலமாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

உடுமலை நகரின் மையத்தில் அமைந்துள்ளது பழமை வாய்ந்த மாரியம்மன் கோவில். மூல விக்ரகத்தின் முன்பு சுயம்பு உருவாகிய சிறப்பு பெற்ற தலமாக இக்கோவில் உள்ளது. கோவிலில் ஆண்டுதோறும், விமர்சையாக திருத்தேரோட்டம் நடக்கிறது. இதற்காக, மார்ச் 28 ல், நோன்பு சாட்டப்பட்டது. திருக்கம்பம் நிலைநாட்டுதல் செய்த பிறகு நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான, திருத்தேரோட்டம் இன்று( ஏப்13ல்) கோலாகலமாக நடைபெற்றது. காலை 6:00 மணிக்கு மேல், மகாசக்தி மாரியம்மன் திருத்தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து, மாலை 4:15 மணிக்கு மேல், திருத்தேரோட்டம் நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !