திருமலையில் ஒன்றரை லட்சம் பேர் தரிசனம்!
ADDED :5132 days ago
நகரி:திருப்பதி வெங்கடேசப் பெருமாள் கோவிலில் சனி, ஞாயிறு ஆகிய இரு நாட்களில், ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். திருமலையில் பாபவிநாசனம் வழியில் உள்ள பரிவேட்டை மண்டபத்தில் இன்று (நவ., 7) வனபோஜன உற்சவம் நடைபெறுகிறது. ஸ்ரீதேவி, பூதேவி சமேதரரான மலையப்ப சுவாமி, உற்சவமூர்த்தியாக எழுந்தருளுகிறார். இங்கு செல்ல, திருமலையின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் இலவச பஸ் வசதிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.