உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஹேவிளம்பி ஆண்டு பிறப்பு கோவில்களில் சிறப்பு வழிபாடு

ஹேவிளம்பி ஆண்டு பிறப்பு கோவில்களில் சிறப்பு வழிபாடு

திருப்பூர்;"ஹேவிளம்பி தமிழ் புத்தாண்டு பிறப்பு முன்னிட்டு,  திருப்பூர் வட்டார கோவில்களில், நேற்று சிறப்பு பூஜை மற்றும்  வழிபாடு நடந்தது. பக்தர்கள் திரளாக பங்கேற்று வழிபட்டனர். துர்முகி ஆண்டு நிறைவு பெற்று, நேற்று தமிழ் புத்தாண்டான "ஹே விளம்பி பிறந்தது. சித்திரை மாதப் பிறப்பு, சித்திரை விஷூ கனி என தமிழர் மற்றும் கேரளத்தினர், நேற்று இதை சிறப்பாக கொண்டாடினர். வீடுகள், வர்த்தக நிறுவனங்களில், கனி
வகைகளை சுவாமிக்கு படைத்தும், தங்கம், வெள்ளி போன்ற  ஆபரணங்கள், ரூபாய் நோட்டுகள் ஆகியவற்றை சுவாமி பாதங்களில் வைத்து பூஜித்தும், புத்தாண்டை வரவேற்றனர்.
திருப்பூர், அவிநாசி, பல்லடம், பொங்கலூர் வட்டார கோவில்களில்  சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் நடந்தன. பக்தர்கள்  தீர்த்தக்குடம் மற்றும் பால் குடம் ஏந்தி, பாதயாத்திரையாக
கோவில்களுக்கு சென்றனர். திருப்பூர் யுனிவர்சல் ரோடு, ஷீரடி சாய் பீடத்தில் சிறப்பு
அபிஷேகம் மற்றும் ஆரத்தி நிகழ்ச்சி நடந்தது. பாபாவின்  பாதத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட ஒரு ரூபாய் நாணயம், பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. மண்ணரை செல்வ
விநாயகர் கோவிலில், 48வது ஆண்டு சித்திரை கனி விழாவும்,  சத்யா காலனி சித்தி விநாயகர் கோவிலில், 31 ஆண்டு  சித்திரைக்கனி விழா மற்றும் சென்னியப்பா நகர் ராஜகணபதி
கோவிலில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு நடந்தன. நேற்று காலை  தீர்த்தக்குட ஊர்வலம், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார  பூஜை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.
திருப்பூர் விஸ்வேஸ் வரர் கோவில், வீரராகவப் பெருமாள் கோவில்கள், குருவாயூரப்பன்
கோவில், கோட்டை மாரியம்மன் கோவில், புஷ்பா சந்திப்பு  பத்ரகாளியம்மன் கோவில், ஆண்டிபாளையம் பத்ரகாளியம்மன்  கோவில், ஜான் ஜோதி கார்டன் செல்வவிநாயகர்,
சாமந்தன்கோட்டை தொந்தி விநாயகர் கோவில் உள்பட அனைத்து  கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !