கருமாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா
ADDED :3106 days ago
பவானி: பவானி, தேவபுரம் கருமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா நேற்று நடந்தது. பவானி அருகே உள்ள தேவபுரத்தில், கருமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை முதல் தேதியில், சித்திரை திருவிழா விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இதன்படி, நேற்று சித்திரை திருவிழா நடந்தது. நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கூடுதுறை காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தக் குடம் எடுத்து வந்தனர்.
கருமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து, தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும்
அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று மாலை திருவிளக்கு பூஜை, நாளை காலை பொங்கல் வைத்தல், மாலையில் மாவிளக்கு, முளைப்பாலிகை ஊர்வலம், இரவு அக்னிசட்டி, அலகுகுத்தி ஊர்வலம் நடக்கிறது. வரும், 17ல், மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவடைகிறது.