புனித வெள்ளி பிரார்த்தனை
திண்டுக்கல்;திண்டுக்கல் புனித வளனார் ஆலயத்தில் புனித வெள்ளியை முன்னிட்டு சிறப்பு திருப்பலி நடந்தது. அதிகாலை சிலுவை சுமக்கும் திருப்பலி நடந்தது. இதில் பிஷப் தாமஸ்
பால்சாமி தலைமை வகித்தார். பாதிரியார்கள் ஸ்டேன்லிராபின்சன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். அதனைத் தொடர்ந்து மாலை 3:00 மணி ஆராதனை பெருவிழா நடந்தது, மாலை 6:30 மணிக்கு சிறப்பு பிரார்த்தனையும், திருப்பலி நடந்தது. இதில் திரளான கிறிஸ்துவர்கள் பங்கேற்றனர். சி.எஸ்.ஐ., ஆலயத்திலும், மேட்டுப்பட்டி புனித வியாகுல அன்னை ஆலயத்தில் நேற்று காலை 6.30 மணிக்கு சிறப்பு பிரார்த்தனை பாதிரியார் செல்வராஜ் தலைமையில் நடந்தது. பின் மாலை 3:00 மணிக்கு மன்றாட்டு பிரார்த்தனையுடன், மாலை 6.30 மணிக்கு சிறப்பு ஆராதனை நடந்தது.
தாண்டிக்குடி: மங்களம்கொம்பு புனித அந்தோணியா ஆலயத்தில் புனித வெள்ளி விழா நடந்தது. மங்களபுரத்திலிருந்து சிலுவை ஊர்வலம் நடந்தது. பாதிரியார் ஆரோக்யராஜ் தலைமையில் வழிபாடு நடந்தது.