ஊத்துக்காடு எல்லம்மன் கோவில் பிரம்மோற்சவம் துவக்கம்
ADDED :3109 days ago
ஊத்துக்காடு: ஊத்துக்காடு எல்லம்மன் கோவில் பிரம்மோற்சவம், கொடியேற்றத்துடன் இன்று காலை துவங்கியது.வரும், 28ம் தேதி வரை, கோலாகலமாக நடைபெறுகிறது. வாலாஜாபாத் அடுத்த ஊத்துக்காடு கிராமத்தில், எல்லம்மன் கோவில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் சித்திரை மாதம் பிரம்மோற்சவம் நடை பெறுவது வழக்கம். நடப்பாண்டு பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, ஊத்துக்காடு எல்லம்மன் கோவிலில், இன்று காலை , 4:30 மணிக்கு, பிரம்மோற்சவ கொடியேற்றப்படுகிறது. அதை தொடர்ந்து, தினமும் பல்வேறு வாகனங்களில், எல்லம்மனுக்கு உற்சவங்கள் நடைபெறும். பிரம்மோற்சவத்தின், 10வது நாளில், மாலை ஊத்துக்காடு எல்லம்மன் தெப்பலில் எழுந்தருளஉள்ளார். இந்த சித்திரை பிரம்மோற்சவத்திற்கான ஏற்பாடுகளை, ஊத்துக்காடு எல்லம்மன் கோவில், பரம்பரை நிர்வாக அறங்காவலர்கள் மற்றும் பங்குதாரர்கள் செய்து உள்ளனர்.