மதுரையில் ராமானுஜர் ஆயிரமாவது ஆண்டு விழா
ADDED :3109 days ago
மதுரை: மதுரையில் ராமானுஜர் ஆயிரமாவது ஆண்டு விழாவையொட்டி வைஷ்ணவ மாநாடு மற்றும் நாமசங்கீர்த்தன நகர் வலம் நடந்தது. உ.வே. அரங்கராஜன் சுவாமி தலைமை வகித்தார். உ.வே. சுந்தரராஜாசாரியார் துவக்கினார். ஸ்ரீரங்கம் ஸ்ரீநிவாசாச்சாரியார், முகுந்தரான் சுவாமி, விளாஞ்சோலைப் பிள்ளை சுவாமி பங்கேற்றனர். ஆழ்வார்திருநகரி ரெங்கராமானுஜ ஜீயர், ஸ்ரீவில்லிபுத்துார் சடகோப ராமானுஜ ஜீயர் ஆகியோர் கூடலழகர் பெருமாள் கோயிலில் துவங்கி மாசி வீதிகள் வழியாக சென்ற நகர் வலத்திற்கு தலைமை வகித்தனர்.