ஈஸ்டர் சிறப்பு திருப்பலி பிரார்த்தனை
ADDED :3125 days ago
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி தூய பாத்திமா அன்னை ஆலயத்தில், ஈஸ்டர் சிறப்பு திருப்பலி நேற்று நடந்தது. கிருஷ்ணகிரி தூய பாத்திமா அன்னை ஆலயத்தில், நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு, ஈஸ்டர் நள்ளிரவு சிறப்பு திருப்பலி பூஜை நடந்தது. திருத்தல வளாகத்தில் நடைபெற்ற சிறப்பு திருப்பலி பூஜையில், தர்மபுரி மறை மாவட்ட ஆயர் லாரன்ஸ்பயஸ், திருப்பலி மறையுறை மற்றும் திருப்பலி பூஜையை நிறைவேற்றி வைத்தார். முன்னதாக, ஏசு உயிர்த்தெழும் நிகழ்வு நடந்தது. தொடர்ந்து, ஏசுவை வரவேற்கும் வகையில், அனைவரும் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர். நிகழ்ச்சியில், ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.