உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமானுஜர் 1,000மாவது ஜெயந்தி விழா

ராமானுஜர் 1,000மாவது ஜெயந்தி விழா

ஓசூர்: ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டையில், ராமானுஜரின்,  1,000மாவது ஜெயந்தி விழா நடந்தது. கிருஷ்ணகிரி மாவட்ட அகில இந்திய விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங்தள் ஆகியவை
சார்பில், ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டையில், ராமானுஜரின், 1,000மாவது ஜெயந்தி விழா நேற்று காலை நடந்தது. ஆர்.எஸ்.எஸ்., மாவட்ட தலைவர் அன்னையப்பா ஜி தலைமை
வகித்தார். தேன்கனிக்கோட்டை பேட்டராய சுவாமி கோவில் அர்ச்சகர் ஜெகன்நாத ஸ்ரீசானுதாசன், குத்து விளக்கேற்றி விழாவை துவக்கி வைத்தார். வக்கீல் ராம்பிரகாஷ் முன்னிலை வகித்தார். அகில இந்திய விஸ்வ ஹிந்து பரிஷத் மாநில இணை செயலாளர்
விஷ்ணு குமார் வரவேற்றார். கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்ட  இஸ்கான் அமைப்பு திட்ட இயக்குனர் ஸ்ரீனிவாச சியாமதாஸ், ராமானுஜரின் வாழ்க்கை வரலாற்று குறித்து சொற்பொழிவு ஆற்றினார். அகில இந்திய விஸ்வ ஹிந்து பரிஷத் மாநில  துணைத்தலைவர் மணியன் பேசினார். விஸ்வ ஹிந்து பரிஷத் மாவட்ட துணைத்தலைவர் ரங்க நாத், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஜெயசந்திரய்யா உட்பட பலர் பங்கேற்றனர்.  கெலமங்கலம் ஒன்றிய பஜ்ரங்தள் அமைப்பாளர் சுனில் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !