உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாரியம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம்

மாரியம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம்

பெ.நா.பாளையம்: பெத்தநாயக்கன்பாளையம் அருகே, கொட்டவாடி  மகாசக்தி மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, நேற்று காலை, 7:00 மணிக்கு மேல் சக்தி அழைத்தல் நடந்தது. மதியம், 12:00 மணிக்கு மேல், ஏராளமான பெண்கள் பால்குடம் எடுத்து,
முக்கிய வீதிகள் வழியாக, ஊர்வலம் சென்று, கோவிலை வந்தடைந்தனர். பின், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. இன்று மதியம், 12:00 மணிக்கு மழைவேண்டி
அம்மனுக்கு கூழ்படைத்தல், மாலை, 6:30 மணிக்கு மேல்  திருவிளக்கு பூஜை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !