விருதுநகரில் ஈஸ்டர் கொண்டாட்டம்
ADDED :3434 days ago
விருதுநகர்:விருதுநகரில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயங்களில் ஈஸ்டர் நடந்தது. விருதுநகர் தூய இன்னாசியார் ஆலயத்தில் பாதிரியார் ஞானப்பிரகாசம், துணைப் பாதிரியார்
தாமஸ் வெனிஸ் தலைமையிலும், பாண்டியன்நகர் தூய சவேரியார் ஆலயத்தில் பாதிரியார் ஆரோக்கிய செல்வம், மைக்கேல், பிரிட்டோ, அந்தோணிராஜ் தலைமையிலும், ஆர்.ஆர்.நகரில் உள்ள தூய வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் பாதிரியார் பெனடிக்ட் தலைமையிலும் ஈஸ்டர் விழா ஆராதனை, திருப்பலி மற்றும் மறையுரை நடந்தது. ஈஸ்டர் விழா கொண்டாட்டத்தில் பட்டாசுகள் வெடித்து நள்ளிரவு ஆராதனைகளும் நடந்தது. ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.