ஆர்.எஸ்.மங்கலம் டூ திருவெற்றியூர் பஸ் இயக்க பக்தர்கள் வலியுறுத்தல்
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலத்தில் இருந்து நேரடியாக திருவெற்றியூர் செல்ல பஸ் வசதி இல்லாததால், திருவெற்றியூர் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் அவதியடைகின்றனர்.
திருவாடானை அருகே திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயில் மிகவும் பிரசித்திபெற்றது. இங்கு வெளியூர்களில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
முக்கியத்துவம் வாய்ந்த இந்த கோயிலுக்கு ஆர்.எஸ்.மங்கலத்தில் இருந்து செல்வதற்கு ரோடு வசதி இருந்தும், பஸ் வசதி கிடையாது.இதனால், இப்பகுதியில் இருந்து திருவெற்றியூர் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் திருவாடானை சென்று அங்கிருந்து வேறு பஸ்சில் கோயிலுக்கு செல்லும் நிலை உள்ளது. 10 கி.மீ., சுற்றி செல்வதால் பக்தர்களுக்கு சிரமமும், காலம் மற்றும் பண விரையம் ஏற்படுகிறது. பக்தர்களின் நலன் கருதி ஆர்.எஸ்.மங்கலம், இந்திராநகர், பாரனூர், களங்காப்புளி, வெட்டுக்குளம், அழியாதான்மொழி, பேரவயல் வழியாக
திருவெற்றியூருக்கு நேரடி பஸ் இயக்க வேண்டும், என பக்தர்கள் வலியுறுத்தினர்.
இது குறித்து வெட்டுக்குளத்தை சேர்ந்த ராமநாதன் கூறுகையில், ஆர்.எஸ்.மங்கலத்தில் இருந்து களங்காப்புளி, வெட்டுக்குளம் , அழியாதான்மொழி வழியாக பஸ் இயக்குவதன் மூலம் பஸ் வசதியே பார்க்காத இப்பகுதியில் உள்ள சுமார் 20க்கும் மேற்பட்ட கிராமத்தினர் பயனøடையும் நிலை ஏற்படுவதுடன், அரசுக்கும் வருவாய் ஏற்படும். எனவே சம்மந்தபட்ட போக்குவரத்து துறை அதிகாரிகள் இப்பகுதி மக்களின் நலன் கருதி இந்த வழித்தடத்தில்
பஸ் இயக்க நடவடிக்கையெடுக்க வேண்டும் என்றார்.